அரசியல் பொறியில் விழவேண்டாம் – கத்தோலிக்க மதகுருக்கள் பாப்பரசரிடம் கோரிக்கை
பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்தை பிற்போடுமாறு சில கத்தோலிக்க மதகுருக்களும், சாதாரண மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாப்பரசர் பிரான்சிசின் சிறிலங்கா பயணத்தை பிற்போடுமாறு சில கத்தோலிக்க மதகுருக்களும், சாதாரண மக்களும் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஏபி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலும் ஏனைய முக்கிய இடங்களிலும், எதிரணியினால் பெரியளவிலான பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடியாத வகையில், சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுச் செயற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பீல்ட் மார்சல் பட்டமும், பாதுகாப்பு அமைச்சர் பதவியும் தரப்பட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சரத் பொன்சேகா ஆதரவு அளித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பாக, மைத்திரிபால சிறிசேனவை பொது வேட்பாளராக முன்னிறுத்தியுள்ள எதிரணியின் சார்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அதிகாரபூர்வமற்ற பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, வெளிநாடுகளுக்கான தூதுவர்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் சிலர் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வாரத்தில் மேலும் ஐந்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிரணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஆதரவு வழங்க அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரதானமான பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்கப் போகிறார்கள் என்பது பற்றிய யோசனைக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேற்கு அவுஸ்ரேலியாவில் உள்ள பேர்த் தடுப்பு முகாமில் இருந்து, இளம் இலங்கைக் குடும்பம் ஒன்றை நௌருவில் உள்ள தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவராகப் பணியாற்றிய மிச்சேல் ஜே சிசன் தனக்கு இலஞ்சம் தர முயன்றதாக, சிறிலங்கா அமைச்சர் குணரத்ன வீரக்கோன் சுமத்திய குற்றச்சாட்டை, அமெரிக்கத் தூதரகம் நிராகரித்துள்ளது.