மேலும்

செய்தியாளர்: கார்வண்ணன்

விக்னேஸ்வரனின் அழைப்பை நிராகரித்தார் சிவா பசுபதி

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டம் தயாரிக்கும் உபகுழுவில், வட மாகாண முதலமைச்சரின் பிரதிநிதியாக பங்கேற்க விடுக்கப்பட்ட அழைப்பை, சிறிலங்காவின் முன்னாள் சட்டமா அதிபரும், அரசியலமைப்பு நிபுணருமான சிவா பசுபதி, நிராகரித்துள்ளார்.

மூத்த இராஜதந்திரியைக் கொழும்புக்கு அனுப்புகிறது இந்தியா

ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயங்கள் தொடர்பாக, ஆராய்வதற்கும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்துவதற்கும், மூத்த இராஜதந்திரி ஒருவரை சிறிலங்காவுக்கு அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய வெளிவிவகாரச் செயலர் அடுத்தவாரம் கொழும்பு வருகிறார்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்திய வெளிவிவகாரச்  செயலர் எஸ்.ஜெய்சங்கர் அடுத்தவாரம் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

பிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் சிறிலங்கா வருகிறார்

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ ஸ்வைர், அடுத்த வாரம் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவும் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து ஓய்வு

சிறிலங்கா இராணுவத்தின் ஆட்டிலறிப் படைப்பிரிவின் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க நேற்றுடன் ஓய்வு பெற்றிருக்கிறார்.

பாகிஸ்தான் போர் விமானங்களை சிறிலங்கா வாங்காது – இந்திய ஊடகம்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுத்தாலும் கூட, சீனாவில் வடிவமைக்கப்பட்டு பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட ஜே.எவ்-17 போர் விமானங்களை சிறிலங்கா வாங்குவதற்கு வாய்ப்பில்லை என்று சிறிலங்காவின் முன்னணி பாதுகாப்பு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகளை பிணையில் விடுவிக்கும் சிறிலங்கா இராணுவ சட்டப்பிரிவின் முயற்சி தோல்வி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, கடத்தல் தொடர்பாக, கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளைப் பிணையில் விடுவிக்க, சிறிலங்கா இராணுவ சட்டப் பிரிவு  மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்திருக்கிறது.

ஜே.எவ்-17 போர் விமானங்களை கொள்வனவு செய்யுமாறு சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அழுத்தம்

ஜே.எவ்-17 போர் விமானங்களை விற்பனை செய்வது தொடர்பாக, சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அழுத்தங்களைக் கொடுப்பார் என்று லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல பாதுகாப்பு ஊடகமான ஐஎச்எஸ் ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி செய்தி வெளியிட்டுள்ளது.

பிரகீத் கடத்தல் – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரியும் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த மற்றொரு சிறிலங்கா இராணுவப் புலனாய்வு அதிகாரியை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பெப்ரவரிக்கு முன் சிறிலங்கா வருவார் ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்துக்குள் சிறிலங்காவுக்கான பயணத்தை மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.