வடக்கு மாகாண முதல்வருடன் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திப்பு
நல்லிணக்க செயல்முறைகளுக்கு உதவும் நோக்கில், ஆறு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடுகள் மற்றும், மீள உருவாகாமல் உத்தரவாதப்படுத்தலுக்கான சிறப்பு அறிக்கையாளரான பப்லோ டி கிரெய்ப் இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.




