மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

எதிர்க்கட்சித் தலைவர் விடயத்தில் தலையிடேன் – பங்காளிக் கட்சிகளிடம் மைத்திரி உறுதி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரைத் தெரிவு செய்யும் விவகாரத்தில் தாம் தலையிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.

ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே அதிகாரபூர்வ முடிவு – இரா.சம்பந்தன்

போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைக்க சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதான அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக, ஐ.நா விசாரணை அறிக்கை வெளிவந்த பின்னரே, அதிகாரபூர்வ நிலைப்பாட்டை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

ஜெனிவா அமர்வுக்கு முன்னர் மூன்று முக்கிய அறிக்கைகளை தயார்படுத்துகிறது சிறிலங்கா

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்துக்கு முன்னர், மூன்று முக்கிய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை சிறிலங்கா அரசாங்கம் தயார்படுத்தவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

மகிந்தவின் பலம் மேலும் வீழ்ச்சி – மைத்திரியின் கையில் சுதந்திரக் கட்சியின் அதிகாரம்

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன  கட்சிக்குள் தனது அதிகாரத்தை வலுப்படுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு கட்டுப்பட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 80 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் சிறிலங்கா கோரிக்கை

அனைத்துலக சமூகம் சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.

சிறிலங்கா நாடாளுமன்றில் மகிந்தவுக்கு முன்வரிசை ஆசனம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்படும் என்று நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்பியைக் கைவிட்டு தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடிவுகளுக்கு தாம் கட்டுப்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச.

தாஜுதீன் கொலையாளிகள் இருவர் இத்தாலிக்குத் தப்பியோட்டம்

சிறிலங்காவின் ரக்பி அணி வீரர் வசீம் தாஜுதீன் கொலையுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் இத்தாலிக்குத் தப்பிச் சென்றுள்ளதாக, குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

சந்திரிகா,மைத்திரி, ரணில் நேற்றிரவு சந்திப்பு – பிரச்சினைகளை தீர்க்க முயற்சி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோருக்கு இடையில் நேற்றிரவு முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.