மேலும்

பாஜக தலைவர்களுடன் ரில்வின் சில்வா குழுவினர் தொடர் சந்திப்பு

இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜேவிபி பொதுச் செயலர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் பாஜகவின் உயர் மட்டப் பிரமுகர்களைச் சந்தித்துக் கலந்துரையாடி வருகின்றனர்.

நான்கு நாள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ள ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவினருக்கு பாஜக தலைமையகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அங்கு பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்பு)  பி. எல். சந்தோஷ் ஜியுடன்,  ஜேவிபி குழுவினரைச் சந்தித்து கலந்துரையாடினர்.

அவர், பாஜகவின் வரலாறு, அமைப்பு ரீதியான பயணம் மற்றும் அதன் விரிவான அடிமட்ட வலையமைப்பு குறித்து அவர்களுக்கு விளக்கினார்.

அதேவேளை,  ‘பாஜகவை அறிவோம்’ முன்னெடுப்பின் கீழ், ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான, குழுவினருக்கு நேற்று முன்தினம் இரவு டெல்லியில்  பாஜக சார்பில் இராப்போசன விருந்து அளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பாஜகவின் அமைப்பு ரீதியான கட்டமைப்பு குறித்தும், அடிமட்ட மக்களுடன் இணைவதற்காக கட்சி தனது முழு அமைப்புப் பணிகளின் மையத்திலும் சேவையை எவ்வாறு வைக்கிறது என்பது குறித்தும்  கலந்துரையாடியதாக பாஜகவின் தேசிய பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வினோத் தாவ்டே தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா எப்போதும் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ என்ற கொள்கையை வளர்த்து வந்துள்ளது என்றும் அவர் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *