மேலும்

ஈரான்- சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

நியூயோர்க்கில் நடைபெறும்  ஐ.நா பொதுச் சபையின்  81வது கூட்டத்தொடரில், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சியைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

தற்போதைய பிராந்திய மற்றும் அனைத்துலக நிகழ்வுகள் குறித்து இரு அமைச்சர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாக, எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள ஒரு பதிவில், விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

பதற்றங்களைத் தணிப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரத்தின் மூலம் சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கும் சிறிலங்கா விடுத்த அழைப்பை அவர் மீண்டும் வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிராந்திய உறுதித்தன்மையை விரைவில் மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளைத் தொடரவும் அவர் ஊக்குவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *