மேலும்

காணிகளை விடுவிக்கக் கோரி வசாவிளான் மக்களும் போராட்டத்தில் குதித்தனர்

சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, வசாவிளான் மக்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

வலி.வடக்கு பிரதேசத்தில் 36 ஆண்டுகளுக்கு மேலாக சிறிலங்கா இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள, தமது காணிகளை விடுவிக்கக் கோரி, தையிட்டி, மயிலிட்டி, பலாலி பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் வசாவிளான் மக்கள் நேற்றுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேற்று காலை 10.00 மணியளவில் வயாவிளான் சந்தியில் காணிகைளை விடுவிக்கக் கோரும் கவனயீர்ப்புப் போராட்டம் பெருமளவு மக்களின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டது.

தமது சொந்த நிலங்களை இழந்து, முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தவித்து வரும் வயாவிளான் மக்கள், ஆக்கிரமிக்கப்பட்ட  பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவித்து, சிறிலங்கா
இராணுவத்தின் வசமுள்ள  காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என இந்தப் போராட்டத்தின் போது வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *