நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை -அமைச்சரவை அனுமதி
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை இரண்டு ஆண்டுகள் நீடிப்பது தொடர்பான, சர்ச்சைக்குரிய முன்மொழிவுக்கு சிறிலங்கா அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு சட்டத்துறையின் மூத்த உறுப்பினர்கள், சிறிலங்கா சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள போதும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு அனுமமதி பெறப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு தற்போது நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
முன்மொழியப்பட்ட இந்த மாற்றத்திற்கு அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டியிருப்பதால், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.
இந்தத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கம் கொண்டுள்ளது.
