கொழும்பு துறைமுகத்தில் பாகிஸ்தான் போர்க்கப்பல்கள்
இரண்டு பாகிஸ்தான் கடற்படை போர்க் கப்பல்கள், நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
பாகிஸ்தான் கடற்படையின் ‘பி.என்.எஸ். தைமூர்’ மற்றும் ‘பி.என்.எஸ் அஸ்லத்’ ஆகிய போர்க் கப்பல்களே சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளன.
கொழும்புத் துறைமுகத்தில், பாகிஸ்தான் கடற்படைக் கப்பல்களுக்கு சிறிலங்கா கடற்படையால் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் போர்க் கப்பல்கள் கொழும்பு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து ‘லயன் ஸ்டார் V’ என்ற இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்க உள்ளன.
இந்தப் பயிற்சி இரு கடற்படைகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்தி, கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
