அடுத்த மாதம் சிறிலங்கா செல்கிறார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அடுத்த மாதம் 24ஆம் திகதி அவரது இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
இதன்போது, அவர் சிறிலங்கா அரசாங்க தலைவர்களையும், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களையும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பயணத்துக்கான ஏற்பாடுகளை கொழும்பில் உள்ள ஐ.நா பணியகம் மேற்கொண்டு வருகிறது.
இந்தப் பயணத் திட்டம் தொடர்பான ஐ.நாவின் கொழும்புக்கான வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ட்ரே பிராஞ் (Marc-André Franche) சிறிலங்கா பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் மாத அமர்வில், சிறிலங்கா தொடர்பான இறுதி அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள நிலையில் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.