வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – தடுக்க முயன்றதால் பதற்றம்
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு வெள்ளவத்தையில் இன்று முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
போரின் இறுதிக் கட்டத்தில் உயிரிழந்தவர்கள், இறந்தவர்கள், காயமடைந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களை நினைவுகூரும் வகையில், வெள்ளவத்தை அலெக்ஸாண்ட்ரா வீதிக்கு எதிரே உள்ள கடற்கரைக்கு அருகில், இந்த நிகழ்வு நடைபெற்றது.
கடற்கரையில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற பாரதியார் பாடல் பாடப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பரிமாறப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், மற்றும் மூவினங்களையும் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வை ஒரு குழுவினர் குழப்புவதற்கு முயற்சித்ததால், பதற்ற நிலை ஏற்பட்டது. எனினும், சிறிலங்கா காவல்துறையினர் அவர்களைத் தடுத்து விட்டனர்.



