போதைப்பொருள் குற்றச்சாட்டு – வசமாக சிக்கினார் பிரதி அமைச்சர் சதுரங்க
தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சிகள், வாக்காளர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்ததாக, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியிருப்பது குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டு அரசியலுக்கு அப்பாற்பட்டது என்றும், கடுமையான குற்றச்செயல்களை உள்ளடக்கியது என்றும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் இதுபற்றி ஏன் காவல்துறையிடம் முறையிடப்படவில்லை என்று விளக்கமளிக்குமாறும், இதுதொடர்பான, அனைத்து தகவல்களையும் உடனடியாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திற்கு வழங்குமாறும், பிரதி அமைச்சர், சதுரங்க அபேசிங்கவிடம் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தேர்தல் பிரச்சினை அல்ல, இது போதைப்பொருள் மற்றும் குற்றம் பற்றியது.
சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுடன், பிரதி அமைச்சர் தாமதமின்றி ஒத்துழைக்க வேண்டும்,” என்றும் கணேசன் கூறியுள்ளார்.
