சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம்
தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக இன்று காலை முதல் மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
தையிட்டி மக்களின் வாழ்விடக் காணிகளை அபகரித்து, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள விகாரையை அகற்றி, காணிகளை ஒப்படைக்க கோரி, காணி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அவர்களின் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் ஒவ்வொரு பௌர்ணி தோறும் விகாரைக்கு முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு திஸ்ஸ விகாரையில் இன்று கொண்டாட்டங்கள் இடம்பெறும் நிலையில் இன்று காலையில் தொடங்கிய மக்கள் போராட்டம், கடும் வெயிலுக்கு மத்தியில் இடம்பெறுகிறது.
இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும், காணி உரிமையாளர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டுள்ளனர்.

