தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்
தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நேற்று, நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடுகள் இன்று மேலும் பல பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

