மேலும்

மகிந்த அணியின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு

SLPPமகிந்த ராஜபக்ச ஆதரவு சிறிலங்கா பொதுஜன முன்னணியினால் பல்வேறு உள்ளூராட்சி சபைகளுக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக வேட்புமனுக் கோரப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போதே, மலர் மொட்டு சின்னத்தில் போட்டியிட, சிறிலங்கா பொது ஜன முன்னணியினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பல நிராகரிக்கப்பட்டுள்ளன.

பாணந்துறை மாநகர சபை, மகரகம நகரசபை, பதுளை, மகியங்கனை, அகலவத்தை, வெலிகம பிரதேச சபைகளுக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணி தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போதிய பெண் வேட்பாளர்கள் உள்ளடக்கப்படாமையினால், மகரகம நகரசபைக்குத் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேறு சில இடங்களில் அதிகாரமளிக்கப்பட்ட முகவர்களால் வேட்புமனு தாக்கல் செய்யப்படாததால், வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *