இலங்கை – இந்திய ஒப்பந்தம் 30 ஆண்டு: தோற்றது ஒப்பந்தமா ? இந்தியாவின் பாதுகாப்பா ?

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தமிழக தோழமை மையத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை மயிலாப்பூரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் மாலை 4 மணிக்கு இந்த கருத்தரங்கம் இடம்பெற இருக்கின்றது.
பேராசிரியர் சரசுவதி அம்மையார் தலைமையில் நடைபெற இருக்கின்ற இக்கருத்தரங்கில், தோழர் பண்டிருட்டி இராமசந்திரன், தோழர் ஜவாகிருல்லா, தோழர் தியாகு, தோழர் கொளத்தூர் மணி, தோழர் ஆழி.செந்தில்நாதன், தோழர் செந்தில், தோழர் ரி.ரி.எஸ்.மணி ஆகியோர் கருத்துரைகளை வழங்க உள்ளனர்.
ஒற்றைச் சிங்கள மோலாண்மையில் சிறிலங்காவின் இறுக்கமான இனவாத கட்டமைப்புக்குள், ஈழத்தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதோடு, அது இந்திய பூகோள அரசியல் நலன்களுக்கு பாதகமானது என்பதனை உணர்கின்றோம் என அழைப்பு விடுத்திருக்கும் இக்கருத்தரங்கம், ஈழத்தமிழர் விடுதலை என்பது இந்திய நலன்களுக்கு எதிரானது அல்ல என்பதனை உரத்துச் சொல்வோம் என அழைத்துள்ளது.