மேலும்

மாதம்: November 2026

சிறிலங்கா மீதான அமெரிக்க அழுத்தங்கள் அதிகரிக்க கூடும்- றொபேர்ட் பிளாக் எச்சரிக்கை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினரின் ஆதிக்கம் அதிகரிப்பது,  சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை, வர்த்தகச் சலுகைகள் மற்றும் வொசிங்டனுடனான இராஜதந்திர உறவுகள் ஆகியவை மீண்டும் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாகக் கூடும் என சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ. பிளாக்  எச்சரித்துள்ளார்.

வரவுசெலவுத் திட்ட முதலாம் வாசிப்பின் மீது இன்று மாலை வாக்கெடுப்பு

சிறிலங்கா அரசாங்கத்தின், 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு, இன்று  மாலை 6.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நல்லிணக்கத்தை நோக்கி அர்த்தமுள்ள முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும்- றொபேர்ட் ஓ. பிளாக் 

ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அமெரிக்க நாடாளுமன்றம், சிறிலங்காவின் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளுடன் சேர்த்து, மனித உரிமைகள் பதிவுகள் குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தக்கூடும் என்று சிறிலங்காவுக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ. பிளாக்  எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் கூற முன்னரே பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவோம்

ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை மையப்படுத்தி, ஐரோப்பிய ஒன்றியம் நிபந்தனை விதிப்பதற்கு முன்னரே, பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபருடன் சீனத் தூதுவர் சந்திப்பு

சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங், சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை  சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் ஆளைக் கடத்தி கொலை செய்த 8 ஈபிடிபியினருக்கு மரண தண்டனை

2008 ஆம் ஆண்டு ஏறாவூரில் ஒருவரைக் கடத்திக் கொலை செய்த குற்றத்திற்காக, ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர்கள் எட்டு பேருக்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

கவிஞர் சேரன் கனடாவில் காலமானார்

ஈழத்துக் கவிஞரும் கனடாவின் வின்சர் பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியருமான கலாநிதி சேரன் உருத்திரமூர்த்தி ரொறன்ரோவில் நேற்றிரவு காலமானார்.

கடல்சார் பாதுகாப்பு தேசிய எல்லைகளைத் தாண்டிய பிரச்சினை- தென்கொரிய தூதுவர்

தெற்காசியாவில் கடல்சார் பாதுகாப்பு ஒரு பிராந்தியப் பிரச்சினை மட்டுமல்ல, அது உலக வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தும் ஒரு விவகாரம் என்று, சிறிலங்காவுக்கான தென்கொரியத் தூதுவர் கிம் யூன்-ஜங் தெரிவித்தார்.

‘றோகண விஜேவீரவின் வாக்குமூலம்’ நூல் வெளியாகிறது

உதேனி சமன் குமார தொகுத்த ‘றோகண விஜேவீரவின் வாக்குமூலம்’ (Rohana Wijeweera’s Statement) என்ற நூல், கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.

அமெரிக்க மரைன் படைப்பிரிவின் விநியோக குழுத் தளபதி கொழும்பு வருகை

கலிபோர்னியாவின் கேம்ப் பெண்டில்டனில் (Camp Pendleton) உள்ள 1வது மரைன் விநியோகக் குழுவின் (1st Marine Logistics Group) தளபதியான பிரிகேடியர் ஜெனரல் ஓமர் ரண்டால் (Omar Randall) சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.