மேலும்

மாதம்: November 2026

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து சிறிலங்கா அதிபருடன் அமெரிக்க தூதுவர் ஆலோசனை

அமெரிக்க தூதுவர் எரிக் மேயர் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்து பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சஷி வீரவன்சவின் மேன்முறையீடு தள்ளுபடி- 2 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி

சட்டவிரோதமாக இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்ற குற்றத்திற்காக, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை சிறிலங்கா உயர்நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது.

ஞானசார தேரரின் 4 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றம்

இஸ்லாமிய மதத்தை அவமதித்தது, மற்றும்  மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கக்கூடிய கருத்துகளை வெளியிட்டதற்காக  கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு  கடுங்காவல் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

பலாலியில் சிறிலங்கா பாதுகாப்பு செயலர் படைத் தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை

சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்த நேற்று வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டு, பலாலியில் உள்ள யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

ராஜ் சோமதேவவின் அறிக்கை, உருவபொம்மையை எரித்து செம்மணியில் போராட்டம்

செம்மணி மனித புதைகுழி தொடர்பாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மற்றும் அவரது உருவ பொம்மையை எரித்து,  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

புதிதாக மூன்றுக்கு அங்கீகாரம் – பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 87 ஆக அதிகரிப்பு

மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு சிறிலங்கா தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதையடுத்து, சிறிலங்காவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மொத்த எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு வந்துள்ள அமெரிக்காவின் எவ்பிஐ புலனாய்வு குழு

இணையவழி மோசடிகளை எதிர்கொள்ளவும், நாடுகடந்த குற்றக் கும்பல்களை முறியடிக்கவும் சிறிலங்கா சட்ட அமுலாக்க அமைப்புகளுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா வலுப்படுத்தி வருகிறது.

சிவாஜிலிங்கம் உடல் தீயுடன் சங்கமம் – பெருந்திரளானோர் அஞ்சலி

மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத் தவிசாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல் இன்று மதியம் தீயுடன் சங்கமமானது.

சிறிலங்கா காவல்துறைக்கு கனடிய காவல்துறையை ஒத்த சீருடை

சிறிலங்கா காவல்துறைக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய சீருடை, கனடிய காவல்துறையின் சீருடையை ஒத்திருப்பதாக  சிறிலங்கா காவல்துறையின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கு உளவு பார்க்கவா இஸ்ரேலிய ட்ரோன்களை வாங்குகிறீர்கள்?

இஸ்ரேலிடமிருந்து வாங்கப்படும்  ட்ரோன்கள், அமெரிக்காவிற்காக உளவு தகவல்களைச் சேகரிக்கப் பயன்படுத்தப்படலாம் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் கவலை எழுப்பியுள்ளார்.