மேலும்

ஷிரந்தி ராஜபக்சவை 13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

இலஞ்ச  ஊழல் விசாரணை ஆணைக்குழுவால்  கைது செய்யப்பட்ட சிறிலங்காவின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ச, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால்,  13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை, கொழும்பில் உள்ள  இல்லத்தில் அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டார்.

அரச வங்கியிலிருந்து 10 மில்லியன் ரூபாவைப் பெற்று, அந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதன் மூலம் பொதுச் சொத்துச் சட்டம் மற்றும் ஊழல் தொடர்பான விதிகளின் கீழ் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஷிரந்திர ராஜபக்ச தலைமையில் இயங்கிய சிரிலிய சவியா அமைப்பு சம்பந்தப்பட்ட நிதி நடவடிக்கைகளுடனும் இந்த விசாரணை தொடர்புடையது.

விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதை அடுத்து ஷிரந்தி ராஜபக்ச, சிறைச்சாலை அதிகாரிகளால் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *