செம்மணிப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம், செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதையடுத்து, 70 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளில், இதுவரை மொத்தமாக 283 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வின் 16ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
இதன்போது புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், குழந்தைகளின் 2 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.
இந்த அகழ்வின் போது ஒன்றோடு ஒன்று இணைந்த நிலையிலிருந்த 3 எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியின் தடயவியல் அகழ்வாய்வுத் தளம் ஒன்று மற்றும் இரண்டில் இருந்து மொத்தமாக 283 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 279 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
படங்கள் – குமணன் (முகநூல்)


