சிறிலங்காவில் டொலரின் மதிப்பு ரூ. 327.38 ஆக அதிகரிப்பு
அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று சிறிலங்கா ரூபாவின் மதிப்பில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா மத்திய வங்கியின் தரவுகளின்படி, அமெரிக்க டொலரின் வாங்கும் விலை, ரூ. 318.57 இல் இருந்து ரூ. 319.77 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்கும் விலை, ரூ. 326.12இல் இருந்து ரூ. 327.38 ஆக உயர்ந்துள்ளது.
பல்வேறு வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக, சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
