ஈரானிய கப்பலினால் திருகோணமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலா?
ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் புஷேர் என்ற விநியோக கப்பல், இயந்திரக் கோளாறு காரணமாக திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளதால், அங்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் இல்லை என சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர், மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கப்பலை நகர்த்த முடியாததால், அது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
அதில் சரிசெய்யப்பட வேண்டிய பல இயந்திரக் கோளாறுகள் உள்ளன. நாங்கள் அதை கொழும்பிலிருந்து திருகோணமலைக்கு இழுத்து வர வேண்டியிருந்தது. இயந்திரத்தை இயக்கி அதை நகர்த்த முடியாது.
பாதுகாப்பைப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை ஈரான் முடிவு செய்யும். வெளியுறவு அமைச்சு ஈரானிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகிறது,” என்றும், சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
