சிறிலங்காவில் ஒரே மாதத்தில் 3.2 சதவீதத்தினால் அதிகரித்த பணவீக்கம்
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், ஏப்ரல் மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 2.2 சதவீதமாக பதிவாகியிருந்த பணவீக்கம், ஒரே மாதத்தில், 3.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.
மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகப் பதிவான உணவுப் பணவீக்கம், ஏப்ரல் மாதம், 2.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
உணவல்லாத பொருட்களின் பணவீக்கம், மார்ச் மாதத்தில் 2.9 சதவீதமாக இருந்த நிலையில், ஏப்ரலில் 6.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை அமெரிக்க டொலருக்கு நிகரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
