சரிவைச் சந்தித்த சிறிலங்காவின் சுற்றுலாத்துறை
சிறிலங்காவின் சுற்றுலாத் துறை பல மாத வளர்ச்சிக்குப் பின்னர், மார்ச் மாதத்தில் முதல் முறையாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
மத்திய கிழக்கு போர்ச் சூழலினால், சிறிலங்காவுக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடுமையாகக் குறைந்துள்ளது.
2025 மார்ச் மாதத்தில் 229,298 ஆக இருந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை, 2026 மார்ச் மாதத்தில் 183,979 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கிட்டத்தட்ட 50,000 பயணிகளின் வருகை குறைந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 367.6 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த சுற்றுலாத்துறை வருவாய், 2026 மார்ச் மாதத்தில் 352.0 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இது 4.9% சரிவைக் காட்டுகிறது.
அதேவேளை, தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து, 2026 மார்ச் மாதத்தில் 814.8 மில்லியன் அமெரிக்க டொலரை எட்டியுள்ளது.
இது 2026 பெப்ரவரியில் 729.0 மில்லியன் அமெரிக்க டொலராகவும், 2025 மார்ச் மாதத்தில் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராகவும் இருந்தது.
