ஈரானிய கடற்படையினரை திருப்பி அனுப்பும் விவகாரம்- உத்தரவாதம் கோரும் இஸ்ரேல்
சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈரானிய கடற்படையினரை சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக இஸ்ரேல் உத்தரவாதம் கோரியுள்ளது.
புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட சிறிலங்காவுக்கான இஸ்ரேலிய தூதுவர் ருவெண் அஸார், சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 240 ஈரானிய கடற்படையினரை திருப்பி அனுப்புமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவில் உள்ள ஈரானிய கடற்படையினரை அவர்களது தாயகத்துக்கு அனுப்புவது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் தான் தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், அவர்கள் மீண்டும் நாடு திரும்பிய பின்னர், அவர்களோ அவர்களின் கப்பல்களோ எமக்கோ அல்லது அமெரிக்காவுக்கோ எதிரான போர்களில் ஈடுபடக் கூடாது.
அவ்வாறான செயலிழப்பு செயற்பாட்டை சிறிலங்கா அரசாங்கம் உறுதிப்படுத்தினால், திருப்தி அடைவோம் என்றும் இஸ்ரேலிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
