மேலும்

குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை- இன்று விவாதம்

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று நாடாளுமன்றத்தில் விவாதம் இடம்பெறவுள்ளது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த நம்பிக்கையில்லா பிரேரணை,  தரமற்ற நிலக்கரி கொள்வனவு மற்றும் இறக்குமதி, மற்றும் மின் உற்பத்தியில் அவற்றின் தாக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது.

அத்துடன், அமைச்சர் குமார ஜயகொடி  உரக் கூட்டுத்தாபனத்தில், கொள்வனவு முகாமையாளராக  பணியாற்றிய காலத்தில், நடந்த ஊழல் தொடர்பாக நீதிமன்றத்தில் அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதும்  எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்துள்ளதற்கு காரணமாகும்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணை மீது இன்று இடம்பெறும் விவாதத்தை அடுத்து, வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் தோற்கடிக்கும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *