மேலும்

முன்னிலை சோசலிச கட்சி அலுவலகத்தை ஜேவிபி கைப்பற்றியது சட்டவிரோதம்

யக்கலவில் உள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலகத்தை ஜேவிபி கைப்பற்றியது சட்டவிரோதம் என்றும், அதனை  முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்குமாறும்,  கம்பஹா நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கம்பஹா மேலதிக நீதிவான் ஷிலானி பெரேரா நேற்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார் என, முன்னிலை சோசலிசக் கட்சியின்  செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.

செயலகத்தில் இருந்து  முன்னிலை சோசலிசக் கட்சியின் உறுப்பினர்களை விரட்டியடித்ததும் சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

செயலகத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடக் கோரி, முன்னிலை சோசலிசக் கட்சி நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *