மேலும்

எண்ணெய் வழங்க முன்வந்த ஈரான் – சிறிலங்கா நிராகரிப்பு

ஈரான் வழங்க முன்வந்துள்ள எரிபொருள் சலுகையைப் பயன்படுத்திக்கொள்ள முடியாதிருப்பதாக  சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ்ஸ  இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள்  தாங்கி கப்பல்களைக்  கொண்ட நாடுகள் ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் வழங்கிய சலுகையால் பயனடைய முடியும்.சிறிலங்காவிடம்  தற்போது அந்த வசதி இல்லை.

ஈரான் வழங்க முன்வந்த இந்த சலுகையை சிறிலங்கா வரவேற்கிறது. கப்பல்கள் இல்லாமை காரணமாக அரசாங்கத்தால் மேற்கொண்டு செயல்பட முடியாதுள்ளது.

இருப்பினும் மசகு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் இறக்குமதிக்காகப் பல கேள்விப்பத்திரங்கள் திறக்கப்பட்டு, மாற்று வழிகள் மூலம் எரிபொருள் விநியோகத்தைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *