தாக்குதல் குறித்து அமெரிக்கா அறிவிக்கவில்லை
ஈரானிய கடற்படையின் ஐஆர்ஐஎஸ் டேனா போர்க்கப்பல் மூழ்கடிக்கப்படுவதற்கு முன்னரோ பின்னரோ, அதுபற்றி அமெரிக்கா தம்முடன் தொடர்புகொள்ளவில்லை என்று, சிறிலங்கா பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து இந்த இராணுவ நடவடிக்கை தொடர்பாக முன்கூட்டியே அறிவிக்கப்படவோ, விளக்கமளிக்கப்படவோ இல்லை.
எந்தவொரு தகவல் தொடர்பும் அவர்களிடம் இருந்தும் கிடைக்கவில்லை.
பின்னர், தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத், அளித்த விளக்கக் குறிப்பின் மூலம் மட்டுமே என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும் என்றும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
