மேலும்

ஷங்காய் மாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது பெரும் தவறு

சீனாவில் நடந்தத ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், உச்சிமாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது ஒரு தவறான தீர்மானம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடத்திய ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

சிறிலங்கா அரசாங்கத்தின் இந்த தீர்மானம், பொருளாதார நன்மைகளை நிராகரிப்பதாக அமைந்திருப்பதுடன், அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக் கொண்ட ஒரு நாடு என்ற அதன் விம்பத்தை சேதப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

இந்த ஆண்டு ஷங்காய் உச்சிமாநாட்டில் இணைப்பு, வர்த்தக வசதி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை முக்கிய விவாதப் பொருள்களாக இருந்தன.

இதுபோன்ற சூழ்நிலையில் சில நன்மைகளைப் பெறும் வாய்ப்பை சிறிலங்கா இழந்திருக்கலாம்.

சிறிலங்காவின் கடந்த கால அரசாங்கங்கள் அணிசேரா வெளியுறவுக் கொள்கையைப் பராமரித்து வந்தன.

தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை சர்வதேச சமூகத்தால் கேள்விக்குள்ளாக்கப்படலாம்.

ஏனெனில் நாடு மேற்கத்திய சார்பு நாடு என்று முத்திரை குத்தப்படும் வாய்ப்பு உள்ளது.

ஷங்காய் உச்சிமாநாட்டில் பங்கேற்பதைத் தவிர்க்க அரசாங்கம் எடுத்த முடிவிற்குப் பின்னால்,  அமெரிக்க அரசாங்கத்தின் அழுத்தங்கள் இருந்ததா என்றும், அவர் கேள்வி எழுப்பினார்.

சிறிலங்காவுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா நிர்ணயித்த ஏற்றுமதி வரி வீதம் குறைவாக இருந்தபோதிலும்  பாகிஸ்தான் அந்த மாநாட்டில் பங்கேற்ற  முன்மாதிரியை சிறிலங்காவும் பின்பற்றியிருக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *