இந்தியர்கள் அதிகளவில் தாக்கப்படும் நாடு சிறிலங்கா
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் சிறிலங்காவிலேயே அதிகம் நிகழுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டில் இருந்து வெளிநாடுகளில் தாக்குதலுக்கு இலக்காகிய இந்தியர்கள் தொடர்பான அறிக்கை ஒன்று இந்திய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையில், உலகில் அதிகளவில் இந்தியர்கள் தாக்கப்படும் நாடாக சிறிலங்கா உள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு சிறிலங்காவில் 9 பேரும், ரஷ்யா மற்றும் பிலிப்பைன்சில் தலா 6 பேரும் தாக்கப்பட்டுள்ளனர்.
மேற்கு நாடுகளை விட ஆபிரிக்க நாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படுவது குறைவாக உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் கென்யா, மடகஸ்கார் போன்ற நாடுகள் இத்தகைய சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டுகளில் சிறிலங்கா, அமெரிக்கா, ரஷ்யா, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அரபுபு எமிரேட்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளில் அதிகளவில் இந்தியர்கள் தாக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவில், 2022இல் 14 பேரும், 2023இல் 30 பேரும், 2024இல் 13 பேரும், 2025இல் 9 பேரும் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
