சம்பூரில் மற்றொரு மனிதப் புதைகுழி? – மனித எலும்பு எச்சங்கள் மீட்பு
திருகோணமலை- சம்பூரில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையின் போது, மனித எலும்பு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சம்பூர் கடற்கரையில், மக் நிறுவனம் கடந்த வெள்ளிக்கிழமை கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.
இந்தநிலையில் நேற்று, முன்தினம் சிறுவர் பூங்கா அருகே கண்ணிவெடி அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, மனித மண்டையோடு மற்றும் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன.
இதையடுத்து, கண்ணிவெடி அகற்றும் பணி நிறுத்தப்பட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நேற்று மூதூர் பதில் நீதிவான் நஸ்லீம் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்காக வரும் புதன்கிழமை வரை, கண்ணிவெடி அகற்றும் பணிகளை இடைநிறுத்த உத்தரவிட்டுள்ளார்.

