செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 7 எலும்புக்கூட்டுத் தொகுதிகள்
யாழ்ப்பாணம் -செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து இன்று மேலும் 7 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் 16ஆம் நாள் அகழ்வுப் பணி இன்று மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது, தடயவியல் அகழ்வாய்வு தளம் 1 இல் இருந்து 4 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடயவியல் அகழ்வாய்வு தளம் 1 இல் இருந்து 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் பகுதியளவில் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை இன்னமும் அகழ்ந்தெடுக்கப்பட்டு இலக்கமிடப்படவில்லை.
ஏற்கனவே 65 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்வுகளின் போது மீட்கப்பட நிலையில், செம்மணிப் புதைகுழியில் இதுவரை கண்டறியப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, செம்மணிப் புதைகுழி வழக்கு யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
சிறிலங்கா பதில் காவல்துறை மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த வழக்கை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று பொறுப்பேற்றுள்ளனர்.