மாகாணசபைத் தேர்தல் சட்டத்தைத் திருத்த சாணக்கியன் தனிநபர் பிரேரணை
மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான தனிநபர் பிரேரணையை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
தடைப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதற்கு 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில், திருத்தம் செய்யப்பட வேண்டியுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, திருத்தங்களை செய்வதற்காக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இந்த தனிநபர் பிரேரணையை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார்.
இந்த சட்டத் திருத்த முன்மொழிவு, மே 22ஆம் திகதியிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.