ஐரோப்பிய ஒன்றிய, சுவிஸ் தூதுவர்களுடனும் தமிழ் தேசிய பேரவை சந்திப்பு
தமிழ்த் தேசிய பேரவையின் பிரதிநிதிகள் இன்று ஐரோப்பிய ஒன்றிய மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான தூதுவர் கார்மென் மொரேனா (Carmen Moreno) – சிறிலங்காவுக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் சிறி வோல்ட் (Siri Walt) ஆகியோருடன் தனித்தனியாக இன்று இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதன் போது, தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பேரவையின் சார்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், நடராஜா காண்டீபன் ஆகியோரும், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் ஆகியோரும் இந்தச் சந்திப்புகளில் கலந்து கொண்டனர்.