“அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்” – அனுரவுக்கு சுமந்திரன் எச்சரிக்கை
மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும், நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும், சிறிலங்கா அரச தலைவர், அனுரகுமார திசாநாயக்க மிரட்டுகிறார் என, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர், எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜேவிபியின் 60 வது ஆண்டு விழாவில் நேற்று சிறிலங்கா அரச தலைவர் அனுரகுமார திசாநாயக்க, நிகழ்த்திய உரை தொடர்பாக, எம்.ஏ. சுமந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
“தங்களிடம் முன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் சிறிலங்கா அரச தலைவர் மிரட்டுகிறார்.
அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும்.
யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை இருக்கிறது என்று சொல்லும்போதே, அவரது கணிதத் தகைமை வெளிப்படுகிறது” என்றும் சுமந்திரன் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.