முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பம்
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகிறது.
2009ஆம் ஆண்டு சிறிலங்காப் படைகள் வன்னியில் முன்னெடுத்த இனஅழிப்பு போரின், இறுதிக்கட்டத்தில், பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.
இதனை நினைவு கூரும் வகையில் ஆண்டு தோறும் மே 12ஆம் திகதி முதல், மே 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை இடம்பெற்று 16ஆவது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் இன்று ஆரம்பமாகிறது.
இதனை முன்னிட்டு தமிழர் தாயகத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகளும், இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.