மலையகத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து 21 பேர் பலி
நுவரெலியா-கம்போல பிரதான வீதியில், ரம்பொடவில் உள்ள, கரண்டியெல்ல பகுதியில் சிறிலங்கா போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமத்தில் இருந்து நுவரெலியா வழியாக குருநாகலுக்கு சென்று கொண்டிருந்த பேருந்தே விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
