ஜெனிவா அமர்வுக்குத் தயாராகும் சிறிலங்கா அரசாங்கம்
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாத அமர்வின் போது அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மீளாய்வு செய்து வருகிறது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பான பணிகளை வெளிவிவகார அமைச்சும், அரசாங்கமும் ஆரம்பித்திருக்கின்றன.
2015இல் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம், வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளால் மீளாய்வு செய்யப்பட்ட பின்னர் அரசாங்கம் இந்த விடயத்தில் உயர்மட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.