கடமைகளைப் பொறுப்பேற்றார் சிறிலங்கா அதிபர்
சிறிலங்காவின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபராக, கோத்தாபய ராஜபக்ச இன்று கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இன்று காலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த நிகழ்வில், சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச, தமது கடமைகளை ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்த நிகழ்வில் சி்றிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் பொதுஜன பெரமுன தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக சிறிலங்கா அதிபர் செயலகத்தில் புதிய அதிபர் கோத்தாபய ராஜபக்சவுக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இத்தகைய நிகழ்வு நடைபெறும் போது, வழக்கமாக காலிமுகத்திடல் வீதி மூடப்படுவது வழக்கம் என்ற போதும், இன்றைய நிகழ்வு நடைபெற்ற போது, காலி முகத்திடல் வீதி மூடப்படவில்லை, வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது.