மேலும்

இராணுவத் தளபதிக்கு தொடர்பு இல்லை – இராணுவப் பேச்சாளர்

கோத்தாபய ராஜபக்சவின் தேர்தல் பரப்புரை விளம்பரத்துக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவின் படம் மற்றும் கருத்து பயன்படுத்தப்பட்டுள்ள விடயத்துடன், இராணுவத் தளபதி எந்த விதத்திலும் தொடர்புபடவில்லை என்று இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

“இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா 2009ஆம் ஆண்டு வெளியிட்ட கருத்து, அவருக்குத் தெரியாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அவரது அறிக்கை மற்றும் ஒளிப்படம் இந்தப் பரப்புரைக்குப் பயன்படுத்தப்பட்டதை இராணுவத் தளபதி அறிந்திருக்கவில்லை.

அவருடன் ஆலோசிக்கப்படாததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.” என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *