மேலும்

மாதம்: April 2019

முன்னாள் போராளிகளுடன் அமெரிக்க உயர் அதிகாரிகள் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் குழுவொன்று கடந்த வாரம், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருகோணமலையில் இந்திய கடற்படையின் அதிவேக தாக்குதல் கப்பல்

இந்திய கடற்படையின் அதிவேக நீருந்து தாக்குதல் படகான INS Cora Divh இரண்டு நாட்கள் பயணமாக நேற்று திருகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்துள்ளது.

இன்று உயர்மட்டப் பேச்சுக்களை நடத்துகிறார் இந்திய பாதுகாப்புச் செயலர்

இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக கொழும்பு வந்துள்ள இந்திய பாதுகாப்புச் செயலர் சஞ்சய் மித்ரா இன்று சிறிலங்கா அரச மற்றும் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.

கையளிக்கப்பட்டவர்கள் எங்கே? – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் போராட்டம்

போரின் இறுதிக்கட்டத்தில்  சிறிலங்கா படையினரிடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று முல்லைத்தீவு – வட்டுவாகலில் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தினர்.

அரசியலமைப்பு சபை உறுப்பினர் நியமனம் – சம்பந்தனுக்கு அறிவிக்கப்படவில்லை

அரசியலமைப்பு சபையின் உறுப்பினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நியமிக்கப்பட்டமை தொடர்பாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று இரா.சம்பந்தனின் ஊடகச் செயலாளர் ரகு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா குறித்த தீர்மானத்துக்கு மேலும் 16 நாடுகள் இணை அனுசரணை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 40 ஆவது கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட சிறிலங்கா தொடர்பான, தீர்மானத்துக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கி கையெழுத்திட்டுள்ளன.

ஐ.நா குழுவினர் சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவுடன் சந்திப்பு

சிறிலங்காவில் பயணம் மேற்கொண்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உபகுழுவின் பிரதிநிதிகள்  சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவை நேற்று சந்தித்துள்ளனர்.

இன்று கொழும்பு வருகிறார் இந்திய பாதுகாப்புச் செயலர்

இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா, சிறிலங்காவுக்கான இரண்டு நாட்கள் பயணத்தை மேற்கொண்டு இன்று கொழும்பு வரவுள்ளார்.

சித்திரைப் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு பறக்கிறார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சிங்கள- தமிழ் புத்தாண்டு விடுமுறையை தமது குடும்பத்தினருடன் கொண்டாடுவதற்காக வெளிநாடு ஒன்றுக்குப் பயணமாகவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாதம் கொழும்பு வருகிறது சிறிலங்கா கடற்படையின் மிகப் பெரிய போர்க்கப்பல்

சிறிலங்கா கடற்படையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ள- மிகப்பெரிய போர்க்கப்பல், அடுத்த மாதம் கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என்று சிறிலங்கா கடற்படை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.