வீணையிலேயே ஈபிடிபி போட்டி – தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி
மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும், தமது கூட்டாளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கில் அவர்களின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் ஈபிடிபி வீணைச் சின்னத்திலேயே போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம், இனப்பிரச்சினையைத் தீர்க்க, எதிர்கால அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
வேறு தமிழ்க் கட்சிகள் விரும்பினால், தொகுதி உடன்பாடு செய்து தேர்தலில் போட்டியிட ஈபிடிபி தயாராக இருப்பதாகவும், டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.