மேலும்

Tag Archives: ஈபிடிபி

சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் டக்ளஸ்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஈபிடிபி செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா,  மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டக்ளசை 90 நாள்கள் தடுத்து வைக்க அனுமதி கோரிய சிஐடி – நிராகரித்த அமைச்சர்

ஈபிடிபி செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை  90 நாள்கள்  தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நிராகரித்து விட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வீணையிலேயே ஈபிடிபி போட்டி – தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் கூட்டணி

மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும், தமது கூட்டாளிக் கட்சிகளுடன் இணைந்து, பரந்துபட்ட கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் திட்டமிட்டுள்ள நிலையில், வடக்கில் அவர்களின் பங்காளிக் கட்சியான ஈபிடிபி தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது.

பருத்தித்துறை பிரதேச சபையிலும் ஆட்சியமைத்தது கூட்டமைப்பு

பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு, ஈபிடிபி, ஐதேக, சிறிலங்கா பொது ஜன முன்னணி என்பன ஆதரவு அளித்துள்ளன.

ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – உறுப்பினரை நீக்க முடிவு?

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேச சபையில் ஐதேக ஆட்சியமைக்க உதவிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினரை கட்சியில் இருந்து நீக்கவுள்ளதாக அந்தக் கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ். மாநகரசபையில் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஈபிடிபி, ஐதேக நிபந்தனையற்ற ஆதரவு

யாழ்ப்பாண மாநகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைப்பதற்கு, ஈபிடிபியும், ஐதேகவும் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.

உள்ளூராட்சித் தேர்தல் – மன்னாரில் 5 சபைகளுக்கு 11 கட்சிகள், 1 சுயேட்சைக் குழு போட்டி

வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில்,  மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி சபைகளுக்கும், 11 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் போட்டியிடுகின்றன.

சாவகச்சேரி நகரசபைக்கு முதலாவது வேட்புமனுத் தாக்கல்- முந்தியது ஈபிடிபி

சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளது. முதற்கட்டமாக உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட 93 உள்ளூராட்சி சபைகளுக்கு நேற்றுத் தொடக்கம் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

சாவகச்சேகரி நகர சபைத் தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியது ஈபிடிபி

வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலுக்கு வேட்புமனுக் கோரப்பட்டுள்ள ஒரே ஒரு சபையான சாவகச்சேரி நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடுவதற்கு ஈபிடிபி கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

களுத்துறைச் சிறையில் டக்ளஸ் மீது தாக்குதல் நடத்திய 6 பேருக்கு கடூழியச் சிறைத்தண்டனை

ஈபிடிபியின் பொதுச்செயலரான நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா  மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில், ஆறு சந்தேக நபர்களுக்கு, தலா பத்தரை ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.