மேலும்

மாதம்: September 2018

கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை

கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி , சிறிலங்கா அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. இதற்கு இரகசியமான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதுகாப்புத் தகவல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கக் கூடாது – சிறிலங்கா அதிபர் உத்தரவு

நீதிமன்றங்களில் நடந்து கொண்டிருக்கும் கொலை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில், முப்படையினர் தொடர்பான உள்ளகத் தகவல்களை வழங்கக் கூடாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

புதுடெல்லி பயணத்துக்கான அழைப்பை நிராகரித்தது கூட்டு எதிரணி

புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா நாடாளுமன்றக் குழுவில் இடம்பெறுவதற்கு, விடுக்கப்பட்ட அழைப்பை கூட்டு எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்த்தன நிராகரித்துள்ளார்.

சிறிலங்காவின் கடன் சுமைக்கு சீனா காரணமல்ல – வெளிவிவகார பேச்சாளர்

சீனாவின் கடன்கள், சிறிலங்காவுக்குப் பிரதான கடன்சுமையை ஏற்படுத்தவில்லை என்று சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவாசுன்யிங் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் வீழ்ச்சி – ரணில்

சிறிலங்காவில் குற்றச்செயல்கள் 35 வீதத்தினால் குறைவடைந்துள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வழக்கு முடியும் வரை ஜோன்ஸ்டனுக்கு விளக்கமறியல்

சதொச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பாக நடக்கும் வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படும் வரை, கூட்டு எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவை விளக்கமறியலில் வைக்க குருநாகல மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறிலங்கா தூதுவருக்கு மாலைதீவில் ஏற்பட்ட அவமானம் – நிகழ்வை புறக்கணித்து வெளியேறினார்

மாலைதீவில் சீனாவினால் கட்டப்பட்ட புதிய பாலத் திறப்பு விழாவின் போது, சிறிலங்கா, பங்களாதேஷ் நாடுகளின் தூதுவர்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் நிகழ்வைப் புறக்கணித்து வெளியேறினர்.

சித்திரவதைக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்காத சிறிலங்கா – ஜெனிவாவில் இருந்து கடிதம்

சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த சிசிர மென்டிசுக்கு எதிரான சித்திரவதைக் குற்றச்சாட்டு குறித்த அறிக்கைக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலளிக்கத் தவறியது குறித்து, சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழு கேள்வி எழுப்பியுள்ளது.

வெறும் கையுடன் நாடு திரும்பிய சிறிலங்கா அணி

இந்தோனேசியாவில் நேற்று நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், சிறிலங்கா உள்ளிட்ட 9 நாடுகள் எந்தவொரு பதக்கத்தையும் பெறாமல் வெறும் கையுடன் நாடு திரும்பின.

வடக்கு, கிழக்கு கடலில் எண்ணெய் வள ஆய்வு – மீண்டும் ஆரம்பம்

வடக்கு- கிழக்கிற்கு அப்பாலுள்ள கடல் பகுதியில் உள்ள இயற்கை எரிவாயும் மற்றும் எண்ணெய் வளங்களை கண்டறிவதற்கான ஆய்வுகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று சிறிலங்காவின் பெற்றோலிய வளங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.