மேலும்

வியட்நாம் சென்றடைந்தார் சிறிலங்கா பிரதமர்

7 ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் ஆசியான் மாநாட்டில் பங்கேற்க சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வியட்நாமின் தலைநகர் ஹனோயை சென்றடைந்தார்.

ஹனோய் நோய் பாய் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, வியட்னாமின், தகவல் தொடர்பு பதில் அமைச்சர்  நுகுயென் மான் ஹங் வரவேற்றார்.

இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா பிரதமர் 7 ஆவது உலகப் பொருளாதார மன்றத்தின் ஆசியான் மாநாட்டில் உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *