மேலும்

புதிய அரசியலமைப்பிலும் பௌத்தத்துக்கே முதலிடம், முன்னுரிமை- சிறிலங்கா அரசு

தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது போன்று புதிய அரசியலமைப்பிலும், பௌத்த மதத்துக்கு முன்னுரிமையும் அதனைப் பாதுகாப்பதற்கான அரசின் கடப்பாடும் உறுதி செய்யப்பட்டிருக்கும் என்று அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய உதய கம்மன்பில, புதிய அரசியலமைப்பு வரைவில், பௌத்த மதத்துக்கான முன்னுரிமையையும் முதன்மை இடத்தையும் அரசாங்கம் நீக்கவுள்ளதாக குற்றம்சாட்டினார்.

இதற்குப் பதிலளித்த அவைத் தலைவரும் அமைச்சருமான, லக்ஸ்மன் கிரியெல்ல,

“பௌத்தத்தை பாதுகாப்பதற்கு தற்போதுள்ள அரசியலமைப்பு விதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது. அதுதொடர்ந்தும் சிறிலங்காவின் முதன்மையான மதமாகவே இருக்கும்.

எதிர்க்கட்சியினர் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம்.

விரைவில் அரசியலமைப்புத் திருத்த வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். அப்போது அதனை அனைவரும் காணலாம்.

அரசியலமைப்பு வரைவு சபையில் சமர்ப்பிக்கப்பட்டு,  எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது கருத்தை வெளியிடும் வகையில், இரண்டு அல்லது மூன்று நாட்கள் விவாதம் நடத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *