மேலும்

மாதம்: August 2018

ஐ.நா தடையை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்த வடகொரியா

ஐ.நாவின் தடைகளை மீறி சிறிலங்காவுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்திருப்பதாக வடகொரியா மீது ஐ.நா அறிக்கை ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

டிசெம்பருக்குள் எட்கா குறித்த பேச்சுக்களை முடிக்க இணக்கம்

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு (எட்கா) தொடர்பான பேச்சுக்களை இந்த ஆண்டில் டிசம்பர் மாதத்துக்குள் முடிக்க சிறிலங்கா அரசாங்கம் இந்தியாவுடன் இணங்கியுள்ளது.

இரணைமடுவில் உள்நாட்டு விமான நிலையம்

கிளிநொச்சி- இரணைமடுவில் உள்ள விமான ஓடுபாதை, உள்நாட்டு விமான தளமாக அபிவிருத்தி செய்யப்படும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கோத்தாவுக்கு ‘கட்டை’ போடுகிறதாம் அமெரிக்கா – திவயின கூறுகிறது

அடுத்த அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ச களமிறங்குவதை தடுப்பதற்கான, நடவடிக்கை ஒன்றில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் ஈடுபட்டுள்ளதாக, திவயின சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி

மன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு, காணாமல் போனோர் பணியகம் நிதி அளிக்கும் என்று பணியகத்தின்  தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு உதவித் திட்டத்தில் சிறிலங்கா

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உறவுகளை முன்னேற்றுவதற்காக, சிறிலங்கா உள்ளிட்ட 27 நாடுகளுக்கு  சுமார் 300 மில்லியன் டொலர் பாதுகாப்பு உதவிகளை வழங்கப் போவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் றிச்சர்ட் பம்பியோ அறிவித்துள்ளார்.

மகிந்தவின் கட்சியுடனான உறவுகளை வலுப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி விருப்பம்

மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம், மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான சிறிலங்கா பொதுஜன முன்னணியுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

மணிவண்ணனுக்கும் நீதிமன்றம் இடைக்கால தடை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினரான, வி.மணிவண்ணன், மாநகர சபையின் அமர்வுகளில் பங்கேற்க கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்தல குறித்து இந்தியாவுடன் தொடர்ந்து பேச்சு – சிறிலங்கா அமைச்சர்

மத்தல விமான நிலையத் திட்டம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்று சிறிலங்காவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐ.நாவில் இந்தியாவுக்கு சிறிலங்கா ஆதரவு – திருப்பதியில் ரணில் அறிவிப்பு

ஐ.நா பாதுகாப்புச் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்புரிமையை வழங்குவதற்கு சிறிலங்கா முழுமையான ஆதரவு வழங்கும் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.