மேலும்

மாதம்: August 2018

ராஜிவ் கொலை கைதிகளை விடுவிக்க முடியாது – இந்திய அரசு அறிவிப்பு

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, ஏழு பேரையும் விடுதலை செய்ய முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவுடன் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான செயலணிக் குழுவை உருவாக்க அனுமதி

ரஷ்யாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு செயலணிக் குழுக்களை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

4 ஆண்டுகளில் சிறிலங்காவுக்கு 1,080.55 கோடி ரூபாவை வழங்கியது இந்தியா

கடந்த நான்கு ஆண்டுகளில் 1,080.55 கோடி ரூபாவை (இந்திய நாணயம்) அபிவிருத்தி உதவியாக சிறிலங்காவுக்கு இந்தியா வழங்கியுள்ளது என்று அதிகாரபூர்வமான அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு மீண்டும் வருகிறது அமெரிக்காவின் அமைதிப் படையணி

அமைதிப் படையணி செயற்திட்டத்தை மீண்டும் செயற்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு உடன்பாட்டில், சிறிலங்காவும் அமெரிக்காவும் நேற்று கையெழுத்திட்டுள்ளன.

கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல்

சீனக் கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

சிறிலங்கா அதிபரின் விடாப்பிடியால் தயானின் தூதுவர் பதவிக்கு அங்கீகாரம்

நீண்ட இழுபறிக்குப் பின்னர், ரஷ்யாவுக்கான தூதுவராக கலாநிதி தயான் ஜயதிலகவை நியமிப்பதற்கு, உயர்பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி அளித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றும் அதிகாரம் இல்லை – கைவிரித்தார் சபாநாயகர்

எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவதற்கு தனக்கு அதிகாரம் இல்லை என்று சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு?

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பலசேனாவின் பொதுச்செயலர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக படகில் வெளிநாடு செல்ல முயன்ற 21 இலங்கையர்கள் ஆழ்கடலில் கைது

சட்டவிரோதமாக வெளிநாட்டுக்குப் பயணம் செய்ய முற்பட்ட 21 இலங்கையர்களை சிறிலங்கா கடற்படையினர் ஆழ்கடலில் கைது செய்துள்ளனர்.

கோத்தாவின் ஊடகப் பேச்சாளராக மிலிந்த ராஜபக்ச நியமனம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.