மேலும்

கோத்தாவின் ஊடகப் பேச்சாளராக மிலிந்த ராஜபக்ச நியமனம்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளர் ஒருவரை நியமித்துள்ளார். இது தொடர்பாக அவர் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின், சிறிலங்கா பொதுஜன முன்னணி உறுப்பினர் மிலிந்த ராஜபக்சவே, கோத்தாபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

“மிலிந்த ராஜபக்சவை எனது அதிகாரபூர்வ ஊடகப் பேச்சாளராக நிமித்துள்ளேன். அவர் ஊடகம் மற்றும் தொடர்பாடலில் தகைமை பெற்றவர். இளைஞர் அபிவிருத்தி தொடர்பான ஆழமான அனுபவம் கொண்டவர். தற்போது அவர், சிறிலங்கா பொதுஜன முன்னணியின், கொழும்பு மாநகர சபை உறுப்பினராக இருக்கிறார்” என்று கோத்தாபய ராஜபக்ச தனது கீச்சகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *